முகப்பு
தமிழ்நாடு

திசைமாறிச் சென்ற 4 நாகை மீனவர்கள்: உணவளித்து திருப்பியனுப்பிய இலங்கைக் கடற்படையினர்

படகு பழுதானதால் திசைமாறிச் சென்ற நாகை மீனவர்கள் நால்வருக்கும் உணவளித்து திருப்பியனுப்பினர் இலங்கை கடற்படையினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
கோடியக்கரை வந்தடைந்த 4 நாகை மீனவர்கள்
பகிர்:

வேதாரண்யம்: படகு பழுதானதால் திசைமாறிச் சென்ற நாகை மீனவர்கள் நால்வருக்கும் உணவளித்து திருப்பியனுப்பினர் இலங்கை கடற்படையினர்.

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் மீன்பிடி பருவம் தொடங்கியுள்ளதால் வெளியூர் மீனவர்கள் தங்கி தொழில் செய்து வருகின்றனர்.

இங்கு தங்கியுள்ள தரங்கம்பாடி அடுத்த புதுப்பேட்டை மாணிக்கப்பங்கு பகுதியைச் சேர்ந்த பாண்டியன்(43) என்பவருக்குச் சொந்தமான படகில், தாழம்பேட்டை பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் (28), ராஜ் (34), டி.ஆர். பட்டினம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (18), மடத்துக்குப்பம்  முருகானந்தம் ஆகியோா் சனிக்கிழமை மதியம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். 

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,  படகு பழுதாகி தவித்துள்ளனா். பழுதான அவர்களது படகு காற்றின் திசையில் இலங்கைக் கடற்கரைக்கு சென்றது.

இதையடுத்து, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மீனவர்கள் வந்த சூழலை உணர்ந்த கடற்படையினர், அவர்கள் சமைத்த உணவை மீனவர்களுக்கு அளித்ததோடு, அவர்களை தமிழகத்திற்கு திருப்பியனுப்பினர்.

இலங்கை மீனவர்கள் கொடுத்து உதவிய 50 லிட்டர் எரிபொருளை பயன்படுத்தி 4 மீனவர்களும் வியாழக்கிழமை காலை கோடியக்கரை வந்தடைந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →