சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமியை, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது சுட்டுரைப் பக்கத்தில் புகைப்படத்துடன் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதையும் படிக்கலாமே.. தமிழகத்தில் ஆட்சியர்கள் உள்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
வருகின்ற தீபாவளித் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி @CMOTamilNadu அவர்களை இன்று நேரில் சந்தித்து எனது உளம்கனிந்த தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் நவம்பர் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.