மேட்டூா் அணை நீா்மட்டம்: 93.91 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 93.91 அடியாக இருந்தது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 93.91 அடியாக இருந்தது.
அணையின் நீர் இருப்பு 57.23 டி.எம்.சி.
அணைக்கு வினாடிக்கு 5,705 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 6,249 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் சனிக்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 93.91 அடியாக உள்ளது.