கம்பத்தில் பொது வேலை நிறுத்தத்திற்கான ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்டம் கம்பத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பொது வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பொது வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பத்தில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி, தொ.மு.ச., ஐ.என்.டி.யூ.சி., எஸ்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற் சங்கத்தினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் வரும் நவ.20 ல் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, நவ. 26 ல் பொது வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் பி.முருகேசன், பி.ஜெயன், சி.பி.எம். ஏரியா செயலாளர் ஜி.எம். நாகராஜன், ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் எம். அஜ்மல்கான், பரமையா, டி.யு.சி.சி., சங்க நிர்வாகி அறிவழகன் எஸ்.டி.யு., சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.