நவ. 23-ல் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம்
நவம்பர் 23-ம் தேதி திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை: நவம்பர் 23-ம் தேதி திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுரகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நவம்பர் 23-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும்.
அப்போது உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.