முகப்பு
தமிழ்நாடு

வட கிழக்கு பருவ மழை எதிரொலி: சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
வட கிழக்கு பருவ மழை எதிரொலி: சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
பகிர்:


கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் புகழ் பெற்றது சுருளி மலையில் உள்ள சுருளி அருவி. வடகிழக்கு பருவமழை தற்போது பெய்து வரும் நிலையில், அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சுருளி அருவிக்கு நீ்ரவரத்து தரும் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய நீர்வரத்து ஓடைகளில் மழை நீர் வரத்தொடங்கியுள்ளது. 

இதனால் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது பொது முடக்கம் காரணமாக சுருளி அருவிப்பகுதியில் பக்தர்கள், சுற்றுலாப்யணிகள் வருவது தடைசெய்யப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் இல்லை. மேலும் அருவிப்பகுதியில் ஏற்படும்  நீர் வரத்தை கிழக்கு வனச்சரகத்தினர் கண்காணித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.