10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு குறித்து டிசம்பருக்குள் முடிவு: செங்கோட்டையன் 
தமிழ்நாடு

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு குறித்து டிசம்பருக்குள் முடிவு: செங்கோட்டையன்

தமிழகத்தில் 2020 - 21ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து டிசம்பர் இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

DIN


சென்னை: தமிழகத்தில் 2020 - 21ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து டிசம்பர் இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10,11,12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையனிடம், 10,11,12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டில் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் பதிலளித்திருந்தார்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT