பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாற்று நடும் போராட்டம்
பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நரியன்குளம் பகுதியில் வியாழக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நரியன்குளம் பகுதியில் வியாழக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது அச்சம் தவிழ்த்தானிலிருந்து நாகபாளையம் விலக்கு வரை உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. மேலும் அந்தப்பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. தற்போது பெய்த மழையால் அந்த சாலைகள் மேலும் மோசமாக மாறின. இதனை சீரமைக்க அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் எவ்வித பலனுமில்லை.
இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை அச்சம் தவிழ்த்தான் பகுதியிலுள்ள நரியன்குளம் என்ற இடத்தில் வைத்து நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சசிகுமார் தலைமை வகித்தார். இதில் மாநில குழு உறுப்பினர் சுகந்தி உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நாற்று நடும் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.