முகப்பு
தமிழ்நாடு

எஸ்பிஐ வங்கியில் 8500 பணியிடங்கள் அறிவிப்பு: வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..!

பாரத ஸ்டேட் வங்கியில் 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

பாரத ஸ்டேட் வங்கியில் 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அந்தந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்திய பட்டதாரி இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறவும்.

நிறுவனம்: State Bank of India

பணி: Apprentice

காலியிடங்கள்: 8,500

தமிழ்நாடு காலியிங்கள்: 470

உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.15,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,500, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.19,000 வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.10.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களை தவிர, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://nsdcindia.org/apprenticeship அல்லது https://apprenticeshipindia.org அல்லது http://bfsissc.com அல்லது https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/ போன்ற ஏதாவதொரு இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2020

மேலும் விரிவான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முழு கட்டுரையைப் படிக்க →