தமிழ்நாடு

மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

DIN

80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்கும் முறை என்ற பாரபட்சமான சுற்றறிக்கையை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தபால் வாக்கு அளிக்கும் வாய்ப்பினை, எவ்வித வெளிப்படையான நடைமுறைகளும் இன்றிக் கொடுப்பது குறித்து, அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விவாதித்து உறுதி செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''சலுகை அளிப்பது போன்று பாசக்கயிற்றை அறிமுகப்படுத்தி பாஜகவிற்கு துணைபோகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பாரபட்சமான சுற்றறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் திரும்பப் பெறவேண்டும்.

பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குப்பதிவில் சாதகமான சூழலை உருவாக்கவே பிகார் மாடல் தேர்தல் உருவாக்கப்பட்டது. பிகாரில் பாஜக கூட்டணியின் வெற்றி நாட்டு மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுளது. 

வாக்களிப்பது ஒருவருடையை ரகசியமான தனிப்பட்ட உரிமை. ஆனால் தபால் வாக்குமுறையானது ரகசியமான வாக்கெடுப்பு முறையையும், ஜனநாயகத்தையும் கடைப் பொருள்களாக்கி, கேலிக்கூத்தாக்கி விடும்.  

'வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர் முறை' ஆளுங்கட்சிக்கும் - எதிர்க்கட்சிக்கும் இடையில், ஒரு சமமான - நேர்மையான தேர்தல் களத்தை நிச்சயம் உருவாக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT