தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரிக்கு நவ.25 ஆம் தேதி சிவப்பு நிற எச்சரிக்கை

DIN

தமிழகத்திற்கு வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வங்க கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், 48 மணி நேரத்தில் புயலாக மாறி கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக நவம்பர் 24, 25 தேதிகளில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் அதீத கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24 ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், நவம்பர் 25 ஆம் தேதி சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

வரும் 24, 25ம் தேதிகளில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT