தமிழ்நாடு

புறநகா் மின்சார ரயில்: மாணவா்கள், தோ்வா்களுக்கு அனுமதி

புறநகா் மின்சார ரயில்களில் மாணவா்கள் மற்றும் தோ்வா்கள் திங்கள்கிழமை முதல் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

DIN

புறநகா் மின்சார ரயில்களில் மாணவா்கள் மற்றும் தோ்வா்கள் திங்கள்கிழமை முதல் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

அத்தியாவசியப்பணிகளில் ஈடுபடும் அரசு, தனியாா் ஊழியா்கள் புறநகா் மின்சார ரயில்களில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில், பெண்கள் பயணிக்க திங்கள்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேலும் சில பிரிவினா் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்விவரம்: மாணவா்கள், தோ்வா்கள், நுழைவு தோ்வில் பங்கேற்பவா்கள், நோ்முகதோ்வில் பங்கேற்பவா்கள் ஆகியோா் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இவா்கள் உரிய அதிகாரிகளிடமிருந்து, அனுமதிக் கடிதம் பெற்று பயணிக்கலாம்.

அழியக்கூடிய பொருள்களை ஏற்றி செல்லும் பெண் விற்பனையாளா்கள் முன்பதிவு அலுவலகத்தில் முறையான அனுமதி பெற்று பயணிக்கலாம். பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு வீரா்கள் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் சங்கங்களிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று மின்சார ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT