தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் 65 அடி தூரத்திற்கு உட்புகுந்த கடல் நீர்: மக்கள் அச்சம்

DIN


செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் 65 அடி தூரத்திற்கு கடல் நீர் கரையைக் கடந்து உட்புகுந்ததால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவர் புயல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் எதிரொலியாக மாமல்லபுரம் - செங்கல்பட்டு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் அவ்வப்போது காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
 
நிவர் புயல் முன்னெச்சரிக்கை அறிவிக்கப்பட்டதை அடுத்து திங்கள்கிழமையில் இருந்தே கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மாமல்லபுரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மாமல்லபுரம் கடற்கரையில் காவல் துறையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாமல்லபுரம் பகுதியில் 65 அடி தூரத்திற்கு கடல் நீர் கரையைக் கடந்து உட்புகுந்ததால் அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் கரையோர குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாலை மாமல்லபுரம் கடலில் கடல் கொந்தளிப்பு அதிகரித்து பத்து அடிக்கும் மேல் உயர்ந்து ராட்சத அலையைப் போல் காட்சி தருவதைப் பார்த்து அப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

மீன்பிடி படகுகளை டிராக்டர்கள் மூலம் இழுத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்.

எச்சரிக்கைகளை மீறி புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நபர்கள்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மற்றுமொரு நாள்! ஈஷா ரெப்பா..

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்!

ஸ்லோவாக்கியா பிரதமருக்கு நினைவு திரும்பியது

‘கேக் காதலி’ அனசுயா பரத்வாஜ்...!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் போலீசில் புகார்!

SCROLL FOR NEXT