தமிழ்நாடு

நிவர் புயல்: தயார் நிலையில் 22 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்

DIN


நிவர் புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரி, ஆந்திரத்தில் 22 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி, மாமல்லபுரம்-காரைக்கால் இடையே நாளை மாலை கரையைக் கடக்கவுள்ளது. அப்போது மணிக்கு 110 முதல் 120 வேகத்தில் காற்று வீசும் என்று கணிக்கப்படுகிறது.

இதன் காரணமாக 22 குழுக்கள் (தமிழகத்தில் 12 குழுக்கள், புதுச்சேரியில் 3 குழுக்கள், ஆந்திரப் பிரதேசத்தில் 7 குழுக்கள்) பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் தேவைகளுக்காக, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர், கேரளத்தின் திருச்சூர், ஒடிசாவின் முண்ட்லி ஆகிய இடங்களில் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து குழுவிடமும் வயர்லெஸ் மற்றும் செயற்கைகோள் தகவல் தொடர்பு கருவிகள், மீட்புப் பணிகளுக்கு தேவையான மரம் வெட்டும் இயந்திரங்கள் உட்பட அனைத்து உபகரணங்களும் உள்ளன. 

தற்போதைய கரோனா சூழலை கருத்தில் கொண்டு, பிபிஇ பாதுகாப்பு உடைகளுடன் என்டிஆர்எப் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினருடன் இணைந்து என்டிஆர்எஃப் செயல்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு

அரசுத்துறை வாகன ஓட்டுநா்களுக்கு பாராட்டு

ரே பரேலி பிரசாரத்தில் காந்திகள்!

உரிய எடையளவுடன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கோரிக்கை

ஸ்வாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை: தில்லி அமைச்சர் அதிஷி விளக்கம்

SCROLL FOR NEXT