நிவர் புயல்: தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் கேட்டறிந்தார்.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
நிவர் புயலுக்கு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவர், தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என முதல்வர் பழனிசாமியிடம் உறுதி அளித்துள்ளார்.
அதேபோன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடமும் பிரதமர் மோடி பேசியுள்ளார். புதுச்சேரிக்கு தேவையான உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்புக்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.