முகப்பு
தமிழ்நாடு

ஊத்தங்கரை அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள நொச்சிப்பட்டி கிராமத்தில் 7 மாடுகள் உயிரிழந்தது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.

Updated On : 26 நவம்பர், 2020 at 10:53 AM
ஊத்தங்கரை அருகே உயிரிழந்த நிலையில் மாடு
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள நொச்சிப்பட்டி கிராமத்தில் 7 மாடுகள் உயிரிழந்தது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.

வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன்(55) என்ற விவசாயி தனது நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த மாடுகளை வீட்டிற்கு அழைத்துவர செல்லும்போது மாடுகளை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதேபோன்று அதே பகுதியில் காசி என்பவரது ஒரு மாடும், இராமச்சந்திரன் என்பவரது இரண்டு மாடும், கலைமணி என்பவரது ஒரு மாடும் என நொச்சிப்பட்டி பகுதியில் மட்டும் 7 மாடுகள் உயிரிழந்தன.

Advertisement

உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவர், மாடுகள் இறந்ததற்கான காரணங்களை கண்டறியும் வகையில் ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்றார். 

இப்பகுதியில் கால்நடை மருத்துவர்கள் மூலம் மருத்துவ முகாம் ஏற்படுத்தினால் இப்பகுதியிலுள்ள மாடுகளை நோய்தொற்று அபாயத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், இறந்த மாட்டிற்கு உரிய நிவாரணம் தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.