மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி வருகிற நவம்பர் 28 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வருகிற நவம்பர் 28 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் வருகிற நவம்பர் 30 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், பொதுமுடக்கம் நீட்டிப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் டிசம்பர் மாதத்தில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
ஒவ்வொரு முறையும் மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு ஏற்பவே தமிழகத்தில் பொதுமுடக்க கட்டுப்பாடுகள், தளர்வுகள் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.