தமிழ்நாடு

சித்தராஜகண்டிகையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ள நீர்

DIN

கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜகண்டிகை ஊராட்சி டிஆர்பி நகரில் மழை வெள்ளம் சுழ்ந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிவர் புயல் காரணமாக கும்மிடிப்பூண்டியில் புதன்கிழமை 145 மில்லி மீட்டர் மழை பெய்தது. 

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சித்தராஜகண்டிகை ஊராட்சி டிஆர்பி நகரில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் டிஆர்பி நகர் பகுதி மக்கள் புதன்கிழமை மாலை முதல் வீடுகளை விட்டு வெளியேவர முடியாமல் தவித்தனர். பெண்கள், குழந்தைகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இது குறித்து அறிந்த சித்தராஜகண்டிகை ஊராட்சி தலைவர் சி.எம்.ரேணுகா முரளி,  டிஆர்பி நகர் விரைந்து சென்று மக்களை அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைத்து அனைவருக்கும் உணவு, குடிநீர் வசதிகளை ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில், வியாழக்கிழமை சித்தராஜகண்டிகை ஊராட்சியில் குடிநீர் வசதி ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் சி.எம்.ரேணுகா முரளி அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் ஏற்பாடு செய்து இருந்தார்.

வியாழக்கிழமை மாலைக்குள் டிஆர்பி நகரில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ரேணுகா முரளி தெவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT