முகப்பு
நிவர் புயல்: சென்னையில் 3 மணிக்கு மீண்டும் தொடங்குகிறது புறநகர் ரயில் சேவை
தமிழ்நாடு

நிவர் புயல்: சென்னையில் 3 மணிக்கு தொடங்குகிறது புறநகர் ரயில் சேவை

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டிருந்த சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
நிவர் புயல்: சென்னையில் 3 மணிக்கு மீண்டும் தொடங்குகிறது புறநகர் ரயில் சேவை
பகிர்:

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டிருந்த சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோருக்காக சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது.

ஆனால், நிவர் புயல் காரணமாக, பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை புறநகர் ரயில் சேவை இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என்றும், இரவு 8 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் என இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில்  செங்கல்பட்டு வரை இன்று பிற்பகல் 3 மணி முதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →