முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனா சிகிச்சையில் 3,924 பேர்

சென்னைக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 3,924 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 2 சதவீதமாகும்.

Updated On : 28 நவம்பர், 2020 at 3:21 PM
சென்னையில் கரோனா சிகிச்சையில் 3,924 பேர்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM


சென்னை: சென்னைக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 3,924 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 2 சதவீதமாகும்.

சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 2,14,191 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2,06,429 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 3,838 பேர் பலியாகியுள்ளனர். இது 1.79 சதவீதமாகும்.

கரோனா பாதித்தவர்களில் 59.91 சதவீதம் பேர் ஆண்கள், 40 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக அண்ணாநகரில் மட்டும் 412 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கடுத்த நிலையில் திருவிகநகர், அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் 300க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மண்டல வாரியாக கரோனா நிலவரம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.