முகப்பு
தமிழ்நாடு

டிசம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் மாவட்டங்கள்

வங்கக்கடலின் தென்கிழக்கு அந்தமான் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
டிசம்பர் 1-ல் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு (கோப்புப்படம்)
பகிர்:

வங்கக்கடலின் தென்கிழக்கு அந்தமான் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் 2-ஆம் தேதி தென்கிழக்கு கடலோரப் பகுதியை நோக்கி நகர உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் டிசம்பர் 1-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2-ஆம் தேதி கனமழை பெய்யும் மாவட்டங்கள்: கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, மாவட்டங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 3-ஆம் தேதி கனமழை பெய்யும் மாவட்டங்கள்: கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, விருதுநகர், மாவட்டங்களில் மிக கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.