முகப்பு
தமிழ்நாடு

டிச. 4 ஆம் தேதி சிவகங்கை செல்கிறார் முதல்வர் பழனிசாமி

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
பகிர்:

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் முக்கிய வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். 

இந்நிலையில் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி சிவகங்கை செல்கிறார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இதனிடையே மதுரையில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டவிருக்கிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →