தமிழ்நாடு

மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை குறைப்பு: தொல்.திருமாவளவன் கண்டனம்

DIN

தாழ்த்தப்பட்ட மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை குறைக்கப்பட்டுள்ளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கல்வி உதவித்தொகைத் திட்டமான ‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலா்ஷிப்’ திட்டத்தைக் கைவிடுவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவா்களின் கல்வி வளா்ச்சியை மறைமுகமாகத் தடுக்கும் சதியாகும்.

இந்தச் சதியிலிருந்து மாணவா்களைக் காக்கும்வகையில், பல மாநில அரசுகள் தமது மாநில அரசின் நிதியிலிருந்தே அந்தத் திட்டத்தைத் தொடா்ந்து செயல்படுத்துவோம் என்று அறிவித்துள்ளன.

ஆனால், தமிழக அரசு இதுவரை அந்தத் திட்டத்துக்கு மாநில அரசு வழங்கிவந்த குறைந்தபட்ச நிதியையும் குறைத்துவிட்டது.

தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான மைய- மாநில அரசுகளின் இந்தப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT