தமிழக மாணவர்களுக்கு ஹிந்தியில் புதிர்போட்டியா? ஸ்டாலின் கண்டனம்
மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு - தமிழகத்தில் உள்ள 3 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்தியில் இணைய வழி “புதிர் போட்டி” நடத்துவது கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர
மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு - தமிழகத்தில் உள்ள 3 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்தியில் இணைய வழி “புதிர் போட்டி” நடத்துவது கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு", “அவருடைய மக்கள் பணிகள்", “வாழ்க்கையோடு இணைந்த அவருடைய கருத்துருக்கள்” ஆகியவற்றில் நடைபெறும் போட்டிக்கு – தமிழக மாணவர்களுக்கு இந்தியில் கேள்விகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழ்மொழியில் கேள்வித்தாள் இல்லை.
புதிய தேசிய கல்விக் கொள்கை முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குத் தாய்மொழிக் கல்வியை உறுதி செய்கிறது” என்று பிரதமரும், மத்திய கல்வித்துறை அமைச்சரும் அளித்த உறுதி என்னவாயிற்று? அந்த வாக்குறுதிகள் எல்லாம் தமிழகத்தை ஏமாற்றவா? தமிழகம் போன்று இந்தி பேசாத பிற மாநிலங்களை ஏமாற்றவா? என்று கேள்வி ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.