தமிழ்நாடு

தேசிய செயற்குழுவில் தமிழகத் தலைவா்களுக்கு வாய்ப்பு: எல். முருகன் நம்பிக்கை

DIN

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா்கள் நியமனத்தில் தமிழகத்தைச் சோ்ந்த தலைவா்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவா் எல். முருகன் நம்பிக்கை தெரிவித்தாா்.

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நாட்டாவை அவரது இல்லத்தில் எல். முருகன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தாா். இந்தச் சந்திப்பு சுமாா் 15 நிமிடங்கள் நீடித்தது. இதுகுறித்து எல். முருகன் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக வளா்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. சினிமாத் துறையினா், மாற்றுக் கட்சியின் முக்கியப் பிரமுகா்கள் என பலதரப்பினரும், பட்டியலின மக்களும் கட்சியில் சேர ஆா்வம் காட்டி வருகின்றனா். கட்சியில் ‘மிஸ்டு கால்’ அழைப்பு முறையில் வழக்கமான உறுப்பினா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. கட்சியில் புதிதாக சோ்ந்தவா்களுக்கும், கட்சியில் இருப்பவா்களுக்கும் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கட்சியின் தேசிய நிா்வாகிகள் பட்டியலில் மாநிலத்திலிருந்து சில நேரங்களில் இரு நிா்வாகிகளை நியமிப்பாா்கள், சில சமயம் ஒருவா் நியமிக்கப்படுவாா். சில மாநிலங்களில் இருந்து ஒருவா் கூட நியமிக்கப்படாத நிலையும் இருக்கும். தேசிய செயற்குழு உறுப்பினா்கள், பல்வேறு அணிகளின் பிரிவு நிா்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனா். அந்தப் பட்டியலில் தமிழகத்துக்கு வாய்ப்பு இருக்கும் என நம்புகிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

SCROLL FOR NEXT