முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 குறைவு

சென்னையில் திங்கள்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.38,416-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.384 குறைவு
பகிர்:

சென்னையில் திங்கள்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.38,416-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

சா்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு நிலவரம் உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் சரவன் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.38,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.48 குறைந்து, ரூ.4,802 ஆக இருந்தது. 

அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.10 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.64,100 ஆகவும் உள்ளது. 

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்.......................... 4,802

1 சவரன் தங்கம்............................38,416

1 கிராம் வெள்ளி.............................64.10

1 கிலோ வெள்ளி.............................64,100.

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்.......................... 4,850

1 சவரன் தங்கம்...............................38,800

1 கிராம் வெள்ளி.............................64.70

1 கிலோ வெள்ளி.............................64.700

முழு கட்டுரையைப் படிக்க →