தமிழகத்தில் புதிதாக 5,017 பேருக்கு கரோனா; 5,548 பேர் குணம்
தமிழகத்தில் இன்று புதிதாக 5,017 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 71 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னை: சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,017 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 71 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவத் தொடங்கிய பிறகு, 39வது நாளாக தொடர்ந்து ஆறு ஆயிரத்துக்கும் கீழ் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய நாளில் 45,279 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த 5,014 பேருக்கும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 3,088 பேர் ஆண்கள், 1,929 பேர் பெண்கள்.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 1,306 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 13-ஆவது நாளாக ஆயிரத்துக்கும் மேல் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,75,484 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களை விட அதிகமாக 5,548 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6.25 லட்சத்தில் இருந்து 6.30 லட்சமாக உயர்ந்துள்ளது. கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 9,917 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் கரோனா பாதித்தவர்களில் இதுவரை 5,75,212 பேர் குணமடைந்தனர்.