தமிழ்நாடு

சீர்காழியில் சரிந்த எரிவாயு தகனமேடை புகைபோக்கி: புகையால் சூழும் நாற்றம்

DIN


சீர்காழி: சீர்காழி எரிவாயு தகனமேடை புகைப்போக்கியை விரைந்து சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சீர்காழி ஈசானியத் தெருவில் நகராட்சிக் சொந்தமான எரிவாயு தகணமேடை உள்ளது. சீர்காழி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களில் ஏதேனும் இறப்பு ஏற்பட்டால்  சடலத்தை இங்கு தான் தகனம் செய்ய வேண்டும்.

ரூ.65 லட்சம் செலவில் கட்டப்பட்டு 2009-ஆம் ஆண்டு முதல் தனியார் அறக்கட்டளை மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 993 சடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.

இங்கு சடலங்களை எரிக்கும் போது புகை வெளியேற 100 அடி உயரத்தில் புகைப்போக்கி அமைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்போக்கியில் தற்போது 40 அடி உயர புகைப்போக்கி சேதமடைந்து விழுந்துவிட்டது.

இதனால் சடலங்களை எரிக்கும் போது வெளியேறும் புகை அப்பகுதியிலேயே சூழ்வதால் துர்நாற்றமும் , சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

மேலும் அங்குள்ள டைல்ஸ்களும் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனை விரைந்து சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT