முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்றக் கழகம்  வட்ட கிளை  சார்பில் கீழ ரத வீதி தெற்கு ரத வீதி சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்றக் கழகம்  வட்ட கிளை  சார்பில் கீழ ரத வீதி தெற்கு ரத வீதி சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலையாளி விடுதலை செய்யப்பட்டதை கண்டித்தும் இந்த வழக்கினை அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், ஸ்ரீவில்லிபுத்தூரில் கடைகளை அடைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். 

திருவில்லிபுத்தூர் மருத்துவர் சமுதாயத்தின் நிர்வாகிகள் சேகர் சுப்பையா கணேசன் முருகன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மருத்துவர் சமுதாய மக்களும் ராஜபாளையம் வத்திராயிருப்பு பகுதிகளைச் சார்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →