முகப்பு
தமிழ்நாடு

எம்.எல்.ஏ. பிரபுவுடன் விருப்பத்தின்பேரிலேயே சென்றேன்: சௌந்தர்யா

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவுடன் தனது விருப்பத்தின் அடிப்படையிலேயே சென்றதாக மணப்பெண்  சௌந்தர்யா  உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
எம்.எல்.ஏ. பிரபுவுடன் விருப்பத்தின்பேரிலேயே சென்றேன்: சௌந்தர்யா
பகிர்:

சென்னை: கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவுடன் தனது விருப்பத்தின் அடிப்படையிலேயே சென்றதாக மணப்பெண்  சௌந்தர்யா  உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவுடன் தனது விருப்பத்தின் அடிப்படையிலேயே சென்றதாக மணப்பெண்  சௌந்தர்யா கூறியதைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தியாகதுருகத்தைச் சேர்ந்த  சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், எனது மகள்  சௌந்தர்யா, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை  இரண்டாம் ஆண்டு படித்து வந்தாள். என்னுடைய மகளை கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு ஆசைவார்த்தைகள் கூறி,  கடத்தி உள்ளார். இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக எனக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது.  எனவே மாயமான எனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சௌந்தர்யா மற்றும் மனுதாரர் சுவாமிநாதன் ஆகியோரை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சௌந்தர்யா மற்றும் மனுதாரர் சுவாமிநாதன் ஆஜராகினர். 

அப்போது சௌந்தர்யா தன்னை யாரும் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லவில்லை எனவும் தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே கணவருடன் சென்றதாக  விளக்கமளித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →