முகப்பு
தமிழ்நாடு

சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்: வைகோ

தமிழகத்தில் வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

Updated On : 10 அக்டோபர், 2020 at 11:24 AM
மதிமுக பொதுச்செயலர் வைகோ
பகிர்:


சென்னை: தமிழகத்தில் வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:  நான் லட்சியத்திற்காக வாழ்பவன் என்பது லட்சக்கணக்கான என் தொண்டர்களுக்கு தெரியும். என்னைப்பற்றி ஒரு சில நாளிதழ்கள் நஞ்சை கக்கி வருகின்றன, அதில் எள்ளளவும் உண்மையில்லை. 

திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என மறுத்த வைகோ, வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என  திட்டவட்டமாக தெரிவித்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.