முகப்பு
தமிழ்நாடு

வைத்தீஸ்வரன்கோயிலில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
வைத்தீஸ்வரன்கோயிலில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
பகிர்:

சீர்காழி: சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

வைத்தீஸ்வரன்கோயில் பேரூர் கழகம் சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் எம்எல்ஏ பிவி.பாரதி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ ம.சக்தி, மாவட்டப் பொருளாளர் வா.செல்லையன், ஒன்றியச் செயலாளர் ராஜமாணிக்கம், பேரூர் கழகச் செயலாளர் போகர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மயிலாடுதுறை மாவட்ட கழகச் செயலாளர் வி.ஜி.கே.செந்தில் நாதன் பங்கேற்று பாசறையில் புதிய உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சந்திர சேகர், நகரச் செயலாளர் பக்கிரிசாமி, ஜெ.பேரவை செயலாளர் மணி, பால் கூட்டுறவு சங்கத் தலைவர் அஞ்சம்மாள், துணைத் தலைவர் பார்த்தசாரதி, முன்னாள் வார்டு உறுப்பினர் அருள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →