முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
தங்கம் விலை
பகிர்:

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது தங்கத்தின் விலை குறைந்து தற்போது ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.19 குறைந்து ரூ.4,865-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி கிராமுக்கு 1.10 காசுகள் குறைந்து, ரூ.66-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.66,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

1 கிராம் தங்கம்.......................... 4,865

1 சரவன் தங்கம்............................38,920

1 கிராம் வெள்ளி.............................66.00

1 கிலோ வெள்ளி.............................66,000

திங்கள்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

1 கிராம் தங்கம்.......................... 4,884

1 சரவன் தங்கம்............................39,072

1 கிராம் வெள்ளி.............................67.10

1 கிலோ வெள்ளி.............................66,800

முழு கட்டுரையைப் படிக்க →