தமிழ்நாடு

கரோனா விழிப்புணர்வு: மதுரை - ராமேஸ்வரம் பள்ளி மாணவர்கள் சைக்கிள் பயணம்

DIN

மானாமதுரை: கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திட மதுரையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள பள்ளி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை  திருப்புவனம் பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அக்டோபர் 15 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் 90 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவதற்காக மதுரைப் பகுதியில் பல பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மதுரையில் கூடி சைக்கிள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

மத்திய அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நலம், மதுரை நேரு யுவகேந்திரா, கலாம் டிரஸ்டினல் ஆர்ட்ஸ் அகாடமி, கலாம் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்தும் இப் பிரச்சாரப் பயணம் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த பயணக்குழுவினர் வழியில் உள்ள கிராம மக்களிடம் கரோனா குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை கொடுத்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நகர்ப்பகுதிகளை கடந்து செல்லும்போது கரோனா விழிப்புணர்வு குறித்த கோஷங்களை எழுப்பிச் செல்கின்றனர்.

சைக்கிள் பயணக்குழுவினர் பிற்பகல் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வந்தடைந்தனர். இரவு திருப்பாச்சேத்தியில் தங்கினர். முத்தனேந்தல், ராஜ கம்பீரம், மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி வழியாக இந்த சைக்கிள் பயணக் குழுவினர் 15 ஆம் தேதி ராமேஸ்வரம் சென்றடைகின்றனர். வழி நெடுகிலும் இவர்கள் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். ராமேஸ்வரத்தில் இந்த மாணவர்கள் அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT