மேட்டூர் அணை: நீர்வரத்து 27,212 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று மாலைக்குள் மீண்டும் 100 அடியாக உயரும் வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடுமேட்டூர் அணை: நீர்வரத்து 27,212 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று மாலைக்குள் மீண்டும் 100 அடியாக உயரும் வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று மாலைக்குள் மீண்டும் 100 அடியாக உயரும் வாய்ப்பு உள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 26,102கன அடியிலிருந்து 27,212 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளதால் நேற்று காலை 99.11அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.90 அடியாக உயர்ந்துள்ளது.
நீர்வரத்தும் பிறப்பும் இதே நிலையில் இருந்தால் இன்று மாலைக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் 100 அடியாக உயரும் வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தால் அணை நிரம்பும். அணையின் முழு கொள்ளளவு 93.45 டி.எம்.சியாகும்
நீர்மட்டம் : 99.90 அடி.
நீர்இருப்பு : 64.71 டி.எம்.சி.
நீர் வரத்து : வினாடிக்கு 26,102 கன அடியிலிருந்து 27212 கன அடியாக அதிகரித்துள்ளது.
வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 14,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.