முகப்பு
தமிழ்நாடு

உசிலை அருகே கோவில் தகராறில் விவசாயி படுகொலை: உடலை எடுக்கவிடாமல் போராட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை - சூலப்புரம் கிராமத்தில் செல்லாண்டியம்மன்கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் அதே ஊரைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் மர்ம நபர்களால் நேற்று இரவு வெட்டி படுகொலை செ

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
செல்லத்துரை
பகிர்:

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை - சூலப்புரம் கிராமத்தில் செல்லாண்டியம்மன்கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் அதே ஊரைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் மர்ம நபர்களால் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள், கிராம மக்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் டி.ஐ.ஜி. ராஜேந்திரன், மதுரை மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார், வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், பேரையூர் தாசில்தார் சாந்தி உள்ளிட்டோர் தலைமையிலான போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

கோவில் தகராறில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறில் விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பதற்றம் நிலவும் சூழலில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

புதன்கிழமை காலையிலிருந்து தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →