முல்லைப் பெரியாறு அணை 
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் சாரல் மழை: நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்குள் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

DIN


கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்குள் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி, அணைக்கு 4,157 கன அடி தண்ணீர் வரத்து வந்தது.

முல்லைப் பெரியாறு அணையில் வடகிழக்கு பருவமழை காரணமாக, நீர்பிடிப்பு பகுதிகளான முல்லையாறு, பெரியாறு, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

அக்.13 இல் (செவ்வாய்க்கிழமை) வினாடிக்கு 1,529 கன அடியாகவும், புதன்கிழமை வினாடிக்கு 2,406 கன அடியாகவும், வியாழக்கிழமை 4,157 கன அடியாகவும் தண்ணீர் அணைக்கு வந்தது.

அணை நிலவரம்: வியாழக்கிழமை காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம்  128.35 அடி உயரமும், அணையில் 4 ஆயிரத்து 342 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவாக இருந்தது. அணைக்குள் வினாடிக்கு 4,157 கன அடி தண்ணீர் வந்தது. 1,400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பெரியாற்றில் 51 மில்லி மீட்டர், தேக்கடி ஏரியில் 24.4 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

மின் உற்பத்தி: பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் வந்த நிலையில், லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மூன்று மின்னாக்கிகளிலும், 42 மெகாவாட் என 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

SCROLL FOR NEXT