முகப்பு
தமிழ்நாடு

தங்கம் சவரனுக்கு ரூ. 184 உயர்வு!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 184 உயர்ந்து, இன்று ரூ.38,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
பகிர்:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 184 உயர்ந்து, இன்று ரூ.38,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது தங்கத்தின் விலை உயர்ந்து ஏற்ற, இறக்க நிலையில் உள்ளது. கடந்த சில வாரங்களாக கிராமுக்கு ரூ. 4,700 - 4,800 என்ற அளவில் உள்ளது. 

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 184 உயர்ந்து, ரூ.38,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.23 உயர்ந்து ரூ.4,853-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி கிராமுக்கு 1.30 காசுகள் உயர்ந்து, ரூ.65.60-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.65,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

1 கிராம் தங்கம்.......................... 4,853

1 சரவன் தங்கம்............................38,824

1 கிராம் வெள்ளி.............................65.60

1 கிலோ வெள்ளி.............................65,600

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

1 கிராம் தங்கம்.......................... 4,830

1 சரவன் தங்கம்............................38,640

1 கிராம் வெள்ளி.............................64.30

1 கிலோ வெள்ளி.............................64,300

முழு கட்டுரையைப் படிக்க →