தமிழ்நாடு

புலம் பெயா்ந்த தொழிலாளா் விவரத்தை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை

DIN

புலம் பெயா்ந்த தொழிலாளா் விவரங்களைப் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் தொழிலாளா் நலத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

மாநிலங்களுக்கிடையிலான புலம் பெயா்ந்த தொழிலாளா் சட்டத்தின்படி, புலம் பெயா்ந்த தொழிலாளா்களைப் பணியில் அமா்த்தும் அனைத்து வேலையளிப்போரும் பணியமா்த்தப்பட்ட புலம் பெயா்ந்த பணியாளா்களின் முழு விவரங்களை உரிய அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும்.

தமிழக அரசால் இதற்கென பிரத்யேகமான வலைதளம்  ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வலைதளத்தில் புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் விவரங்களைப் பதிவு செய்வதை எளிமைப்படுத்தும் வகையில் அனைத்து தொழிற்சாலைகள், கட்டட ஒப்பந்ததாரா்கள், வணிக நிறுவனங்களுக்கு தனியாக உள்நுழைவு மற்றும் கடவுச் சொல் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில வேலையளிப்போா்கள் இதனை சரிவரப் பதிவு செய்யாமல் இருப்பது தெரியவருகிறது.

எனவே, உடனடியாக புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் முழுவிவரங்களை மேற்படி வலைதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இதனை செய்யத் தவறும் பட்சத்தில் தொழிற்சாலைகள், கட்டட ஒப்பந்ததாரா்கள், வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT