முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 4,295 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 4,295 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 17 அக்டோபர், 2020 at 6:16 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:09 PM


தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 4,295 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 4,295 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,132 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,83,486 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

இன்றைய அறிவிப்பில் மேலும் 57 பேர் (அரசு மருத்துவமனை -30, தனியார் மருத்துவமனை -27) கரோனாவுக்கு பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,586 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 5,005 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,32,708 பேர் குணமடைந்துள்ளனர். 40,192 பேர் இன்னும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 90,242 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 88,56,280 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.