தமிழ்நாடு

சந்தன மர வீரப்பனின் 16-ம் ஆண்டு நினைவு தினம்:  நினைவிடத்தில் உறவினர்கள் அஞ்சலி

DIN


மேட்டூரில் சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் 16-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரப்பனின் ஆதரவாளர்களும் உறவினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழக அதிரடிப்படையினரால் கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி சந்தன கடத்தல் வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக்கொள்ளப்பட்டார். 

இதனையடுத்து வீரப்பனின் உடல் மேட்டூர் அடுத்த மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. ஆண்டு தோறும் வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்துவது வழக்கம். 

இந்த நிலையில் இன்று  வீரப்பனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், வீரப்பனின் ஆதரவாளர்களும் உறவினர்களும் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கரோனா தடை உத்தரவு இருப்பதால் கூட்டம் கூடுவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். 

மேட்டூரிலிருந்து மூலக்காடு வரும் வரை ஏழு இடங்களில் காவலர்கள் நிறுத்தப்பட்டு வெளியூர் வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறது. 

வாகனத்தில் வருவோரின் பெயர் அவர்களது முகவரி மற்றும் செல்போன் எண்கள் பதிவு செய்யப்படுகிறது. 

இருப்பினும் தனித்தனி நபர்களாக மூல காட்டில் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். 

வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி வந்து அஞ்சலி செலுத்தி சென்றுள்ளார். மற்ற குடும்பத்தினர் பிற்பகலில் வருவதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT