தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேர் கைது

DIN

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு வழக்குகள் தொடர்பாக மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. 

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4, குரூப் 2ஏ, விஏஓ தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 20 பேரைக் கைதான நிலையில், கடந்த 2017-இல் நடைபெற்ற குரூப் 2 ஏ தோ்வு முறைகேடு தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டனர். 

தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்னதாக டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு தொடர்பாக 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT