சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!
சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 4,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்து, தற்போது ஏற்ற, இறக்க நிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 1,464 குறைந்து, ரூ.37,440-க்கு விற்பனையானது. தொடர்ந்து இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 4,690-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 65.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.65,400 ஆகவும் உள்ளது.
திங்கள்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,690
1 சவரன் தங்கம்............................... 37,520
1 கிராம் வெள்ளி............................. 65.40
1 கிலோ வெள்ளி............................. 65,400
சனிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்.......................... 4,680
1 சவரன் தங்கம்...............................37,440
1 கிராம் வெள்ளி.............................65.40
1 கிலோ வெள்ளி.............................65,400