'களைப்பை போக்கிய அருமருந்து': மகனின் புகைப்படங்களை பகிர்ந்த மா.சுப்ரமணியன்
முன்னாள் மேயரும், திமுக மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியனின் இளையமகன் சு.அன்பழகன் (34) கரோனா பாதிப்பால் சனிக்கிழமை காலமானாா்.
சென்னை: முன்னாள் மேயரும், திமுக மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியனின் இளையமகன் சு.அன்பழகன் (34) கரோனா பாதிப்பால் சனிக்கிழமை காலமானாா்.
மா.சுப்பிரமணியன் மற்றும் அவா் மனைவி காஞ்சனா, கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.
இதற்கிடையில் அவரது மகன் அன்பழகனும் கரோனா பாதிப்புக்கு உள்ளானாா். அன்பழகன் பிறவியில் இருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்டவா் ஆவாா். பெற்றோா்களின் அரவணைப்பிலேயே இருந்து வந்தாா். கரோனா பாதிப்புக்கு உள்ளாகி, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சை பெற்றாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலமானாா்.
மகனின் மறைவால் மன வருத்தத்தில் இருக்கும் மா. சுப்ரமணியன், தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதோடு, கடந்த 35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் "அன்பு".. என்றும் தனது துக்கத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மா.சுப்பிரமணியன் மூத்த மகன் இளஞ்செழியன் மருத்துவா் ஆவாா். அவா் லண்டனில் உள்ளாா்.