தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியாக உயர்வு

DIN

காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததால், இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.20 அடியாக உயர்ந்தது. 

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியிலிருந்து அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,525 கன அடியிலிருந்து 17,004 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கன அடி நீரும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.53 டிஎம்சி ஆக இருந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மீண்டும் மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT