தமிழ்நாடு

ரஷியாவில் கரோனா பலி 25 ஆயிரத்தை நெருங்கியது!

DIN

ரஷியாவில் புதிதாக 15,700 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும் 317 பேர் உயிரிழந்துள்ளனர். 

ரஷியாவில் கடந்த மாதம் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வாரத்தில் சராசரியாக ஒருநாள் பாதிப்பு 15,000 என்ற அளவில் உள்ளது. 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரஷியாவில் புதிதாக 15,700 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,389 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, மொத்த பாதிப்பு 14,47,335 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 317 பேர் உள்பட இதுவரை 24,952 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போது வரை 10,96,560 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 3,25,823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரில் 2,300 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT