தமிழ்நாடு

மாட்டு வண்டி ஓட்டினார் முதல்வர் பழனிசாமி

DIN

புதுக்கோட்டை: கவிநாடு கண்மாயில் விவசாயிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களது விருப்பத்தை ஏற்று மாட்டு வண்டி ஓட்டினார்.

மாட்டு வண்டியில் ஏறி நின்றபடி, மாட்டு வண்டியை ஓட்டி, விவசாயிகள் அளித்த வரவேற்பை முதல்வர் பழனிசாமி ஏற்றுக் கொண்டார். இதைப் பார்த்த பொதுமக்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.

முன்னதாக, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் 200 மாட்டு வண்டிகளுடன் முதல்வர் பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தின் 100 ஆண்டுகள் கனவுத் திட்டமான காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அனுமதி அளித்து ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை வந்துள்ள முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கவிநாடு கண்மாயில் 200 விவசாயிகள் மாட்டு வண்டிகளுடன் வந்து பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT