முகப்பு
தமிழ்நாடு

சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவர் பலி

விழுப்புரம் மாவட்டம் ‌செஞ்சி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:42 PM
சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவர் பலி
பகிர்:

விழுப்புரம் மாவட்டம் ‌செஞ்சி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி  மகன் கதிரவன்(14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில்  ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில்,அந்த கிராமத்தில் உள்ள ராஜ்(40) என்பது தனது கூரை வீட்டை இன்று காலை பிரித்து கட்டினார். அந்த பணியில் கதிரவன் ஈடுபட்டார். அப்போது திடீரென கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய கதிரவன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த நல்லான் பிள்ளை பெற்றால் போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நல்லான் பிள்ளை பெற்றால் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →