ஆயுதபூஜை அலங்காரப் பொருள்கள் விற்பனை மந்தம் 
தமிழ்நாடு

ஊத்தங்கரையில் மந்தநிலையில் ஆயுதபூஜை அலங்காரப் பொருள்கள் விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஆயுத பூஜையை முன்னிட்டு விற்பனை செய்யப்படும் அலங்காரப் பொருள்கள் விற்பனை இன்றி மந்தநிலையில் உள்ளது.

DIN


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஆயுத பூஜையை முன்னிட்டு விற்பனை செய்யப்படும் அலங்காரப் பொருள்கள் விற்பனை இன்றி மந்தநிலையில் உள்ளது.

கடந்த ஆண்டு ஆயுத பூஜை முன்னிட்டு ஊத்தங்கரை பகுதியில் சுமார் 15 லட்சம் மதிப்பிலான அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது, ஆனால் கரோனா நோய் தொற்றால் இந்த ஆண்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அலங்காரப் பொருட்கள் விற்பனை இன்றி மந்த நிலையில் உள்ளது.

அலங்காரப் பொருள்களின் கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதேபோல் பொறி மற்றும் பழக்கடைகள் வியாபாரம் இன்றி மந்த நிலையில் காணப்படுகிறது.  

இதுகுறித்து ஊத்தங்கரையில் உள்ள அலங்காரப் பொருள்கள் விற்பனையாளர் சீனிவாசனை தொடர்பு கொண்டபோது கரோனா பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை, மேலும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதித்து உள்ளனர். ஆகையால், இந்த ஆண்டு பெரிய அளவிலான வியாபாரிகள் நிறுவனத்தார் அதிகப்படியான மக்களை அழைத்து ஆயுதபூஜை கொண்டாடும் நிலை இல்லாததால் விற்பனை மந்த நிலையில் காணப்படுகிறது எனக் கூறினார்.

இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட மிக குறைவான அளவிற்கே முதலீடு செய்துள்ளோம். இருந்தபோதிலும் விற்பனை குறைவாகவே உள்ளது எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT