மருதுபாண்டியர்களின் நினைவு நாள்: மரியாதை செலுத்தினார் ஓ. பன்னீர்செல்வம் 
தமிழ்நாடு

மருதுபாண்டியர்களின் நினைவு நாள்: மரியாதை செலுத்தினார் ஓ. பன்னீர்செல்வம்

மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியர்களின் 219-வது நினைவு நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN


திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியர்களின் 219-வது நினைவு நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைகளுக்கு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் 7 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், துணிநூல் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பொது சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் மருதுபாண்டியர்களின் நினைவு மண்டப வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவுத் தூணிற்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT